மஹிந்தவுடன், மைத்திரியும் சீனாவிடம் நிதி பெற்றுக் கொண்டதாக பரபரப்பு…

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களுக்கு இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தேர்தலின் போது, சீன மேர்ச்சன்ட் பொறியியல் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 2016ஆம் ஆண்டு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

விசாரணைகளில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் நிதியைப் பெற்றனர் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, குறித்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன.

சீன நிறுவனத்திடம் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பரப்புரைக்காக 7.6 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றார் என்று நியூயோர்க் டைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டதை அடுத்து, குறித்த விவகாாரம் தற்கால அரசியலில் சூடு பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.