மொரகஹகந்த – களு கங்கை நீர்த்தேக்க கட்டட நிர்மாணம் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மஹாவலி அமைச்சர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு குலசிங்க மொரகஹகந்த நீர்த்தேக்கம் என எதிர்வரும் 23ம் திகதி பெயரிடப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.