விஜயகலா நாட்டினை விட்டும் வெளியேறுகிறார்.. விக்கி உடன் புதிய கூட்டணி…

தமிழ் விடுதலைப் புலிகள் தலை தூக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் அவரது பிள்ளைகளுடன் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வாரத்தில் அவர் இவ்வாறு வெளிநாட்டு பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன்பிற்பாடு அரசியலில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கின்ற அதேவேளை, வடக்கு முதலைமைச்சர் விக்னேஷ்வரனுடன் சேர்ந்து புதிய அரசியலில் கால்பதிக்க உள்ளதாக வடக்கு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

குறித்த சர்ச்சைக்குரிய கருத்தின் பிற்பாடு அமைச்சுப் பதவியில் இருந்து பதவி விலகிய அவர், பாராளுமன்ற உறுப்புரிமையினையும் இழக்கும் ஆயப்பு உள்ளதாக மேலும் பேசப்படுகின்றது.

அவரது கருத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.