சர்ச்சைக்கு மத்தியில் ஷமியின் மனைவி ஜஹான் மீளவும் மொடலிங் துறையில்…

இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியின் மனைவி ஜஹான், மகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மொடலிங் துறைக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகம்மது ஷமிக்கு, பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் சமீபத்தில் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஷமி தம்மை துன்புறுத்துவதாகவும் அவர் பொலிசில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.