“பேரூந்துக்கு கல், அழுகிய முட்டைகள் கொண்டு தாக்குதல்” பிரேசில் ரசிகர்கள் தோல்வியடைந்த அணியினை வரவேற்றது இப்படித்தான்… – உண்மை நிலவரம்

இம்முறை உலகக் கிண்ண தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்த பிரேசில் அணியானது யாரும் நினைகாதவிடத்து 08வது தொடரில் தோல்வியினை சந்திக்க நேரிட்டது. அது பெல்ஜியத்துடனான போட்டியில் 2:1 என்ற கணக்கில் தோல்வியடைந்தே ஆகும்.

இதனைத் தொடர்ந்து பிரேசில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் வலுத்து வந்திருந்த நிலையில் குறித்த வீரர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு வருகையில் குறித்த பேரூந்துக்கு கல் மற்றும் அழுகிய முட்டைகளை கொண்டு தாக்குதல் நடாத்துவது போன்றதொரு வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

எவ்வாறாயினும், குறித்த வீடியோவானது பொய்யான பிரச்சாரம் என்றும், அது இதற்கு முன்னதாக பிரேசில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேசில் அணியானது நேற்று(09) தாய்நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில் ரசிகர்களால் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தையும் குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் வீடியோ;

பிரேசில் அணி தாயகம் திரும்பிய போது,