இ.போ.ச அறிமுகம் செய்கிறது புதிய app…

இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகளில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு புதிய செயலியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது..

குறித்த இந்த செயலியின் ஊடாக, புறக்கோட்டையிலிருந்து தூர பிரதேசங்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விரும்பிய ஆசனத்தை விரும்பிய தூரத்திற்கு ஒதுக்கீடு செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் போது சாதாரண பேருந்து கட்டணங்களை விடவும் 80 ரூபா மேலதிகமாக செலுத்த நேரிடும் என போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் ஏனைய பிரதான நகரங்களிலும் இந்த செயலியின் ஊடாக பேருந்து ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் முறைமை அறிமுகம் செய்யப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.