முகநூல் நிறுவனத்திற்கு 05 இலட்சம் பவுன் அபராதம் விதிக்க இங்கிலாந்தில் உள்ள தரவுகள் பாதுகாப்பு நிலையம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகம் பூராகவும் உள்ள முகநூல் (facebook) சமூகத்தள கணக்கினை கொண்டுள்ள சுமார் 87 மில்லியனுக்கும் அதிகமான உபயோகதாரிகளது தனிப்பட்ட தரவுகளை கேம்பிரிட்ஜ் எனலிடிகா நிறுவனம் முறைகேடாக வெளியிட்டமைக்கே குறித்த அபராதத் தொகை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தரவுகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.