வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது வரி அல்லது மேலதிக கட்டணம் அறவிட வேண்டாமென ஆலோசனை…

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பப்படும் போது வரி அல்லது மேலதிக கட்டணங்கள் அறவிடாது பணத்தினை வைப்பிலிட வழியமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று(10) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் கூடிய கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.