உதட்டை சுத்தி மட்டும் கருப்பா இருக்கா? அப்போ இப்படி ட்ரை பண்ணுங்க…

உங்கள் முகம் என்ன தான் சிவப்பாக இருந்தாலும் கருமையான உதடுகள், உங்கள் அழகை குறைவாகக் காட்டும். ஆகவே உதட்டின் கருமையைப் போக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன.

எலுமிச்சை சாறு:
இதில் இயற்கையாகவே சிட்ரிக் அமிலம் இருப்பதால், சரும அணுக்களில் கருமை உண்டாவதை தடுக்கிறது. மேலும் சருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது. ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்

மஞ்சள் மற்றும் சந்தனம்:
உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு, மஞ்சள் மற்றும் சந்தனக் கலவை. ஒரு சிறு கிண்ணத்தில் சிறிதளவு சந்தனத்தூள் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இவை இரண்டையும் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை உதடுகளை சுற்றி தடவவும். அரை மணி நேரம் கழித்து அல்லது காய்ந்தவுடன் தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.

எலுமிச்சை மற்றும் ஆலிவ் எண்ணெய்:
எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்ர்த்து, இந்த கலவையை உங்கள் உதடுகளுக்கு பயன்படுத்தலாம். உதடுகளில் இந்த கலவையை தடவி, சில நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனை செய்து வருவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

கற்றாழை:
கற்றாழை இலையை பறித்து அதில் உள்ள பசையை பிழிந்து எடுக்கவும். இந்த பசையால் உங்கள் சருமம் மற்றும் உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் இதனை முகத்தில் ஊற விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.