நாளை மற்றும் நாளை மறுதினம் 09 மணி நேர மின்வெட்டு அமுலுக்கு…

இம்மாதம் 14 மற்றும் 15ம் திகதிகளில் அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் வடக்கு மாகாணம் முழுவதிலும் 09 மணி நேர மின் வெட்டு அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த இந்த மின் வெட்டு வடக்கு மாகாணத்தில், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால் மின்பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் இலங்கை மின்சார சபை அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.