48 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை எடுத்து செல்ல முயற்சித்த இந்தியர் ஒருவரும் 2 இலங்கையர்களும் இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளால் சுமார் 48 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
பறிமுதல் செய்யப்பட்ட வௌிநாட்டு நாணயங்களில் 153,250 யூரோ, 52,950 அமெரிக்க டொலர்கள், 264,000 சௌதி ரியால், 18,500 கட்டார் ரியால் என்பவை அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர் 40 வயதுடையவர் எனவும் இலங்கையர்கள் இருவரும் 40 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.