இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் பிரபல முன்னணி வீரர்களது மாத வருமானம் ஒரு கோடிக்கும் அதிகம் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
“எமது நாட்டின் தேசிய அணி வீரர்களது மாத வருமானம் 100 இலட்சத்திற்கும் அதிகம். ஆதலால் விளையாட்டின் மூலம் தேகாரோக்கியம் பெறுவது மற்றுமின்றி அதற்கு அப்பாலும் விடயங்கள் உள்ளன.
நான் அமைச்சராக இருந்த போது உலக இருபதுக்கு – 20 போட்டியினை வென்றோம், ஆசிய போட்டிகளை வென்றோம், உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்குள் சென்றோம். அந்நாட்களில் சிலர் தெரிவித்தனர் மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட வந்தால் போட்டிகள் தோல்வியடையும் என்று… இப்போது எமது அணியானது தரவரிசையில் எங்கு உள்ளது..?. இவ்வாறான தோல்விகள் வரலாற்றிலேயே இடம்பெற்றில்லை..”