இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை…

திருத்தப்பணியின் காரணமாக மாத்தளையின் சில பகுதிகளில் இன்று(17) காலை 8 மணி முதல் இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பலாபத்வெவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி, மாத்தளை நகர சபைக்குட்பட்ட ரத்தொட்டை, அலுவிகாரையை அண்மித்த பகுதிகள், பலாபத்வெவ நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.