மீரிகம பிரதேசத்தில், 16 வயதான சிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் நேற்று(17) கைது செய்யப்பட்டிருந்த கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அபெரெக்கே புஞ்ஞானந்த என்னும் பௌத்த பிக்குவை எதிர்வரும் 26ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க அத்தனகல நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பௌத்த துறவறம் பூணும் நோக்கில் விஹாரையில் தங்கியிருந்த சிறுவனை குறித்த பௌத்த பிக்கு கடுமையான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளார்.
பாலியல் வன்முறை சம்பவத்தின் பின்னர் சிறுவன் தனது வீட்டுக்கு தப்பிச் சென்றுள்ளான். இது தொடர்பில் சிறுவன் பெற்றோரிடம் கூறியதனைத் தொடர்ந்து பெற்றோர் மீரிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
63 வயதினைக் கொண்ட குறித்த பிக்கு 2004ம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமயவை பிரதிநித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma