தசுனின் விடா முயற்சியும் வீணானது – முதல் வெற்றி பங்களாதேஷுக்கு….

சுற்றுலா இலங்கை ‘A’ அணியுடன் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளின் முதல் போட்டியில் 02 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பெற்றுக் கொள்ள பங்களாதேஷ் ‘A’ அணிக்கு நேற்று(17) வாய்ப்புக் கிட்டியது.

நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் களத்தடுப்பினை தேர்ந்தெடுத்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியானது 50 ஓவர் முடிவில் 07 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களை பெற்றிருந்தது.

வெற்றி இலக்கு 281 ஐக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘A’ அணியானது 50 ஓவர் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 278 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இலங்கை சார்பில் தசுன் ஷானக 78 ஓட்டங்களையும் அஷான் பிரியஞ்சித் 42 இணையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

 

R.Rishma