ஞானசார தேரர் தொடர்பிலான மேன்முறையீட்டு தீர்ப்பு ஆகஸ்ட் 08…

கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்றினை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஹோமாகம நீதிமன்ற முன்னாள் நீதவான் ரங்க திசாநாயகவினால் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான இறுதித் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி தெரிவிக்கப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(18) அறிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றிற்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.