திமுத் 21இற்கும் அப்பால் முன்னிலையில் – ரங்கனவும் முன்னிலையில்…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே கடந்த சனிக்கிழமை(14) காலியில் இடம்பெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் தனது திறமையினை வெளிக்காட்டிய திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய டெஸ்ட் துடுப்பாட்டாளர்கள் வரிசையில் 10 இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னர் திமுத் கருணாரத்ன தரவரிசையில் 31வது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காலி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

மேலும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி ரங்கன ஹேரத் 09 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

R.Rishma