ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருவதாக நேற்று கூறப்பட்டது. இந்த நிலையில், படக்குழு அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் நடிகை சிம்ரன் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் இருவரும் ரஜினியுடன் முதல்முறையாக இணைவதாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஜினி இந்த படத்தில் பேராசிரியராக நடிப்பதாகவும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் கதாபாத்திரத்தில் வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.