ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காரணமாக மிகவும் வெறுப்படைந்துள்ள, அக்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஒரு சிலர் இன்று பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் பதவியில் இருந்து இன்று விலக போவதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு பின்னர், தற்போதை அரசியல் நிலைமை தொடர்பில் மிகவும் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் இதனால், அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களை கைவிட்டு தான் காலியில் இருந்து இன்று கொழும்பு திரும்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(riz)