குளிர்சாதன வசதியை கொண்ட புதிய வகை முச்சக்கர வண்டி அறிமுகம்…

இலங்கையில் மீன், பால் மற்றும் மரக்கறி உட்பட இயற்கையான தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கு குளிர்சாதன வசதியை கொண்ட புதிய வகை முச்சக்கர வண்டியொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இயற்கை உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படுவதனை குறைத்து கொள்வதற்காக விசேடமாக இந்த முச்சக்கர வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள குளர்சாதன பெட்டி சூரிய சக்தியில் இயங்கவுள்ளது. இதனை மலேசிய நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த முச்சக்கர வண்டியில் ஒரே முறையில் 1000l பால், 300Kg இறைச்சி வகைகள் கொண்டு செல்ல முடியும்.

சீரற்ற காலநிலை காரணமாக சூரிய சக்தியை பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் சார்ஜ் செய்து கொள்ள கூடிய வகையில் பெட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

சூழலுக்கு நெருக்கமான இந்த முச்சக்கர வண்டிகள் மணிக்கு 60Km வேகத்தில் பயணிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.