அனுராதபுரம், மிஹிந்தலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புனித நகர எல்லைகளுக்குள் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அரச ஊழியர்கள் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று(19) அனுராதபுரத்தில் இடம்பெற்ற அமைச்சின் நடமாடும் சேவையில் அமைச்சர் உரையாற்றினார்.
மேலும், புதிதாக வர்த்தக முயற்சிகளைத் தொடங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நடத்தும் பொதுமக்களின் பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் நோக்கி, அவர்களுக்கு மாத்திரம் வர்த்தக நிலையங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.