கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அதிகாரசபையினால் வடமாகாண தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று (21) மாலை யாழ் செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் அதிதிகளாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு முதலமைச்சர் விக்ணேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



