பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் – மருத்துவ குழு…

பனாமா ஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், சிறையில் சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரின் உடல்நிலையை மருத்துவ குழு நேற்று பரிசோதனை செய்தது. பரிசோதனைக்கு பிறகு நவாஸ் ஷரிப் சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

அவரது இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்து, அவர் கடும் உடல் சோர்வுடன் காணப்படுவதாகவும் அவரது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலையில் உரிய சிகிச்சையளிக்கும் வசதிகள் இல்லாததால், நவாஸ் ஷரிப் நிலைமை இன்னும் மோசமாகலாம், எனவே அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், நவாஸ் ஷரீப்புக்கு சிறை நடைமுறைகளின்படி வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.