தென் ஆப்பிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
490 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களையும், தில்ருவன் பெரேரா மற்றும் தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.
மேலும் 2 க்கு 0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் இலங்கை அணி சுவீகரித்துக்கொண்டது.
