இலங்கையில் உலர் மற்றும் ஈரமான மண்டல காலநிலையில் பயரிட விசேட புதிய வகையான பழ வகையொன்று வேளாண்மை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த பழ வகையானது அகுனகொலபெஸ்ஸ பகுதியில் வெற்றிகரமாக பயிரிடப்பட்டு வருகிறது.
GAC Fruit எனும் பெயரில் அறிமுகமாகும் குறித்த பழமானது கரட்டினையும் பார்க்க அதிக சத்தினைக் கொண்டதாகும். இதன் விஞ்ஞானப் பெயர் Sweet Gourd- Momordica Cochinchinensis ஆகும்.
இதன் இலையானது மரக்கறியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
இலங்கை விவசாயிகளுக்கு குறித்த பழவகையினால் உயர் வருமானம் பெற வாய்ப்புள்ளதாகவும், இது பயிரிட எல்லா இடங்களுக்கும் பொருத்தமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.