ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்வரும் அக்டோபர் மாதம் 09ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(24) அழைப்பாணை விடுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக , போலி ஆவணங்களை வெளியிட்டமையினால், இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் செயற்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma