அண்மையில் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட பேசு பொருள்தான் மாடல் மாரா. இவர் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனக்கு கிடைத்த அந்த பெரும் வரவேற்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் பல முன்னணி சர்வதேச ஊடகங்கள் மாரா மார்டின் பற்றி புகழ்ந்து எழுதி தள்ளிவிட்டனர். அப்படி என்ன செய்தார் மாடல் மாரா மார்டின்? ஸ்விம் சூட் ரேம்ப் வாக் நிகழ்ச்சியில் நடந்து வரும் போது பசியில் தாய் பால் பருகி கொண்டிருந்த தனது குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த மாரா, தாய் பாலூட்டிய படியே ரேம்ப் வாக்கை முடித்தார். இதுதான் மாராவுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைக்க காரணம்.
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் ஸ்விம் சூட் ரேம்ப் வாக்கில் நடந்து வந்தது குறித்து கூற வார்த்தைகள் போதாது. நான் மிகவும் அற்புதமான உணர்வை பெற்றிருக்கிறேன் என்று கூறிய மாரா மார்டின், என்னை குறித்து பிறர் அறிந்து கொள்வாரா என்பது எனது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால், இப்போது என்னாலேயே நம்ப முடியவில்லை. பல ஊடகங்களில் நான் தலைப்பு செய்தியாகி இருக்கிறேன். அதுவும் எனது மகளுடன். அவளுக்கு நான் நாள்தோறும் செய்துவரும் கடமைக்காக, என்று பெருமிதமாக கூறியுள்ளார்
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் பத்திரிகையின் எடிட்டர் @MJ_DAY இதை முன்கூட்டியே திட்டமிட்டு எல்லாம் செய்யவில்லை. அடுத்தடுத்து பெண்களுக்கான ஸ்பெஷல் ரேம்ப் வாக்கில் வர வேண்டியவர்கள் தயாராக இருக்கிறாரா என்று சரி பார்க்க சென்றிருக்கிறார் @MJ_DAY. அப்போது தான் மாரா மார்டின் தனது குழந்தைக்கு பாலூட்டி கொண்டிருந்ததையும், குழந்தை நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறார். உடனே, நீங்கள் அப்படியே ரேம்ப் வாக் வர தயாரா என்று @MJ_DAY கேட்டவுடன், சற்றே திகைத்த மாரா மார்டின் பிறகு, தான் தாய் பாலூட்டிய படியே ரேம்ப் வாக் வர தயார் என்று கூறியிருக்கிறார்.