சுயாதீன ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையினை, அரசினை பிரதிபலிக்கும் பிரபல அமைச்சர் ஒருவருக்கு விற்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிக்கான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பின் ஒருங்கமைப்பாளர் சுதர்மன் ரதலியகொட மேலும் தெரிவிக்கையில்; குறித்த அலைவரிசையினால் நட்டம் என காண்பித்து சுயாதீன தொலைக்காட்சியினை விற்க உள்ளனர். அதன் தர வரிசையும் தற்போது 06 – 07 இடங்களில் பினதல்லியே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(24) கொழும்பில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.