சிறுவர் மற்றும் பெண்கள் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அறிக்கை, இன்று(25) ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளதாக குறித்த கட்சியின் பொது செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்க வேண்டும் என்ற அடிப்படையில் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் யாழில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma