போதைப் பொருள் பாவனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார் .
போதைப் பொருள் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான தண்டனைகள் விசேட சந்தர்ப்பத்தில் மாத்திரமே நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.