2018ம் ஆண்டுக்கான 06 அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. இப்போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி தகுதி சுற்று அணியையும், மறுநாள் செப்டம்பர் 19 ஆம் திகதி பாகிஸ்தானையும் எதிர் கொள்கிறது.
இந்தியாவுக்கு தொடர்ந்து 2 நாட்கள் விளையாட்டு போட்டி அட்டவணை உள்ளது. இதற்கு முன்னணி தொடக்க வீரர் ஷேவாக் கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்திய அணி முதல் ஆட்டத்தில் விளையாடி விட்டு அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோதும் படி அட்டவணை உள்ளது.
ஓய்வு இல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் விளையாடுவது கடினம். இதனால் அட்டவணையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் இந்தியா ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தினார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஆசிய கிண்ண போட்டி அட்டவணைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
rishma