மத்தளை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பங்கினைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எவ்வித யோசனைகளையும், இந்திய விமான சேவைகள் அதிகாரி சபையின் அவதானத்துக்கு உட்படவில்லை என இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபா உறுப்பினர் பூனம் மஹஜன் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள பொது விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் ஜெயன்ந் சின்ஹா இதனைத் தெரிவித்துள்ளார்.
‘த டைம்ஸ் ஒப் இந்தியா’வில் குறித்த இந்த செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான சேவைகள் அதிகார சபையிடம் இருந்து மத்தளை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து இயக்குவதற்கான யோசனையை கோரி இருப்பதாக இலங்கையின் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma