முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று பாதிப்பால் உடல்நலம் குன்றி கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கருணாநிதியை காண கோபாலபுரம் படையெடுத்து வந்து அவரை பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.
பிரதமர் மோடி கருணாநிதி பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியுடன் நலம் விசாரித்ததாகவும் அவர் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும் அவர் ட்விட்டில் போட்டுள்ளார்.
அவருடைய மகன் மு.க.அழகிரிக்கு நேற்று இரவுக்கு மேல் வந்த தந்தை பற்றிய தகவலால் கலங்கிப் போயுள்ளார் என தெரிய வந்துள்ளது.ஆனால் என்ன தகவல் என உறுதி செய்யப்படவில்லை.