இன்று கொழும்பின் சில பிரதேசங்களுக்கு மின் தடை…

கொழும்பின் சில பகுதிகளுக்கு ​இன்று(28) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும் என்று மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின் தடை அமுல்படுத்தப்படும் என்று மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

132 கிலோ வோல்ட் மின் கட்டமைப்பில் மேம்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த மின்சாரத் தடை அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர குறித்த பிரதேசங்களில் எதிர்வரும் 31 ஆம் திகதி, திடீர் மின்சார தடை ஏற்படலாமெனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.