ஜப்பானில் 107 விமானங்கள் இரத்து…

ஜப்பான் நாட்டை நெருங்கும் ஜாங்டரி புயலால் டோக்கியோவிலும், பிற விமான நிலையங்களில் 107 விமான சேவைகளை இரத்து செய்து உள்ளதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டை ‘ஜாங்டரி’ (வானம்பாடி) என்று பெயரிடப்பட்டு உள்ள புயல் இன்று அதிகாலை நேரத்தில் தாக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக டோக்கியோவிலும், ஹோன்சு தீவு பகுதியிலும் கடும் மழை பெய்யும் எனவும், 15 அங்குல அளவுக்கு இந்த மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக கடுமையான அனல் காற்று வீசி அங்கு 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.