இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனின் சாரதி கைது…

கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனின் சாரதி, சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அருந்திக பெர்ணான்டோவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குள் அத்துமீறி நுழைந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.