இன்று(01) முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு…

சமையல் எரிவாயுவின் விலையை சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்ற நிலையில், மாதந்தோறும், சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் ஜூன் 30 திகதி நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று(01) சமையல் எரிவாயுவின் விலை 1 ரூபாய் 76 காசு உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.