25 வகையான மருந்துக்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பு…

உடன் அமுலுக்கு வரும் வகையில் 25 வகையான மருந்துக்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தாமரை தடாகத்தில் நேற்று(31) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

புற்று நோய்க்கான 10 வகையான மருந்துகள் மற்றும் 15 வகையான விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகளும்,தொற்று நீக்கிகள், நீரிழிவுக்கான மருந்து வகை மற்றும் அதற்கான உபகரணங்கள், ஆஸ்துமா, வலி நிவாரணி உட்பட சில விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

 

R,Rishma