சிறுவர் வன்முறை தொடர்பில் 64,000 முறைப்பாடுகள்…

சிறுவர் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த முறைப்பாடுகள் பதிவாகும் மாவட்டங்களில் கம்பஹா 2ஆவது மற்றும் குருநாகல் 3ஆவது இடத்தில் உள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் , சிறுவர்களைத் தாக்குதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மட்டும் 64,000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.