போட்டிக்கான தோல்வி மற்றும் உபாதை குறித்து திக்வெல்ல கருத்து…

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வீரர்களது சிறு சிறு தவறுகளே காரணம் என இலங்கை அணியின் வீரர் நிரோஷன் திக்வெல்ல போட்டியின் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

“போட்டி பூராகவும் எமது கையினால் தவறுகள் ஏற்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் எமது சிறு சிறு தவறுகள் நிறையவே செய்து அதனை எட்ட முடியாது. என்றாலும் ஓரிரண்டு தவறுகள் நிகழலாம். ஒரே தவறினை மீளவும் மீளவும் செய்தால் வெற்றி பெற முடியாது. குறித்த தவறுகளை சரி செய்து 03வது போட்டியில் வெற்றிபெற எம்மால் கட்டாயம் முடியும்…”

அதேவேளை நேற்று(01 இடம்பெற்ற போட்டியின் போது பந்து தாக்கியதில் தனக்கு ஏற்பட்ட உபாதை குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

“..நாம் பிஸியோ உடன் கதைத்தோம். எக்ஸ்ட்ரே ஒன்றினை எடுத்தேன். அதில் எவ்வித பாதிப்புகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 03நாட்கள் உள்ளன. விளையாட முடியும் என நினைக்கிறேன்…”

 

R.Rishma