2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், இதற்கென நவீனதொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இரத்மலானை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஆயிரத்து 479 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.