பாணந்துறை தெற்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தங்க ஆபரணம் திருடிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பாணந்துரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், களுத்துறை சிறையில் தடுத்துவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொலிஸாரின் தாக்குதலாலேயே தமது கணவர் உயிரிழந்துள்ளதாக சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.
சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.