கொழும்பு மெலிபன் வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்…

கொழும்பு – கோட்டை மெலிபன் வீதி பகுதியில் பைகள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று(06) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

3 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்குச் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.