அரச ஊழியர்களினது சம்பளமானது நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வுக்கு நிகராக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவு;
“…நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், நீதிமன்ற அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சட்ட வரைவுத் திணைக்களத்தினதும் உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரித்து இருப்பினும், ஏனைய பிரிவுகளின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது..” எனவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
R.Rishma