அநுராதபுரம் மாநகர சபையில் பாரிய நிதி மோசடி தொடர்பில் நால்வரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பம்…

அநுராதபுரம் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் அங்கு பணிபுரிந்த பிரதான எழுதுவினைஞர் நால்வர் மற்றும் வருவாய் கட்டுப்பாட்டாளர் ஒருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை மூன்று கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக இரகசிய காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் மாநகர சபையின் சம்பளத்திற்குரிய அதிகாரி கைது செய்யப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma