திருத்தப் பணிகள் காரணமாக மாத்தளை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று(07) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மாத்தளை நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளிலும் மாத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலும் அலுவிஹார பகுதியிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.