புகையிரத விபத்து தொடர்பில் நால்வர் பதவி நீக்கம்…

பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தல் இடம்பெற்ற புகையிரத விபத்து தொடர்பில் ரம்புக்கனையில் இருந்து வருகை தந்த புகையிரதத்தின் சாரதி , உதவி சாரதி ,கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று(06) மாலை கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தப் போது, பின்னால் வந்த மற்றுமொரு புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த விபத்தில் 32 ​பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.