மொரகஹந்த – களுகங்கை செயற்றிட்டம்: ஊழல் மோசடி குறித்து அறிவிக்க விசேட பிரிவு…

மொரகஹந்த – களுகங்கை அபிவிருத்தி செயற்றிட்டத்தின் நிர்மாணப் பணிகளில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக உறுதியான தகவல்கள் சாட்சியங்களுடன் காணப்படுமாயின் அது தொடர்பில் தெரிவிப்பதற்கான ஜனாதிபதி விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

23,000 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் இந்த நாட்டின் பாரிய பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டமான மொரகஹகந்த –

களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளை எவ்வித முறைக்கேடுகளுமின்றி முறையாகவும் வினைத்திறனாகவும் நிறைவு செய்து, அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர் நிரப்பும் விழாவின்போது இந்த விசேட பிரிவினை துரிதமாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாகவே இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

எனவே, 011 – 2034159 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது 011 – 2879976 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக சாட்சியங்களுடன் கூடிய தகவல்களை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிப்பாளர் – விசாரணைகள், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, சொபாதம் பியச, இல. 416/ சீ/1, ரொபட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்ல” எனும் முகவரியிலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.