திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்…

உடல் நலக்குறைவால் ​நேற்று(07) மாலை மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“… தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்..” என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

r.Rishma