கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது…

ஒரு தொகை கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த 03 பேர் வெல்லம்பிட்டிய, சேதவத்தை, களுபாலம் பிரதேசத்தில் வைத்து ராஜகிரிய பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பரிசோதிக்கப்படும் போது 10K 200g கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டோர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று(08) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

R.Rishma